Friday, December 03, 2004 2
ஸ்நோகுவாமி அருவி - III


முந்தைய ஸ்நோகுவாமி பதிவுகள்
ஸ்நோகுவாமி அருவி - I
ஸ்நோகுவாமி அருவி - II
சுட்டவையும் சுடாதவையும்
Friday, December 03, 2004 2


முந்தைய ஸ்நோகுவாமி பதிவுகள்
ஸ்நோகுவாமி அருவி - I
ஸ்நோகுவாமி அருவி - II
Thursday, December 02, 2004 2
இது முதல் முயற்சி..பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகலாம்னு!
படகு சவாரி - இந்தச் சுட்டியின் வீடியோ ....
Note : I have encoded the video stream to be surestream so that it serves at 28kbps, 56kbps for low end users and at 256kbps and 384kbps for broadband users
IEல் வேலை செய்கிறது..firefox முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்!.தற்போது firefoxலும் வேலை செய்கிறது. மேலும் RealPlayer தேவை!
RealPlayer for Windows
RealPlayer for Unix
RealPlayer for Mobile
Tuesday, November 30, 2004 2


சியாட்டிலிலிருந்து 25மைல் தூரத்தில் இருக்கின்றது ஸ்நோகுவாமி அருவி. இதன் உயரம் 270 அடி! கோடை காலத்தில் (ஆகஸ்ட் - அக்டோபர்) வற்றலாக கொட்டும் இந்த அருவி...மழை மற்றும் குளிர் காலத்தில்(டிசம்பர் - மார்ச்) பெருக்கெடுத்து கொட்டும். அருவியை ஒட்டியபடி மலைப்பாதை ஒன்று உள்ளது. மலைப்பாதையில் கீழிறங்கினால், அருவியை அருகிலிருந்து காண ஒரு மேடை வசதி உள்ளது. குளிர் காலங்களில் அருவி பெருக்கெடுத்து கொட்டுவதால்..மேடையிலிருந்து கீழிறங்கமுடியாது! ஆனால் கோடை காலத்தில் ஆற்றில் தண்ணீரின் சீற்றம் குறைந்திருப்பதால் மேடையிலிருந்து ஆற்றில் குதித்து அருவி அருகே சென்று வரலாம்!
Friday, November 12, 2004 0

சியாட்டில் விண்-ஊசி (seattle space needle)
சியாட்டில் நகரத்தின் அடையாளச்சின்னம் இந்த விண்-ஊசி (space needle).
மேலும் விபரங்கள் : வரலாறு . கட்டமைப்பு
பருந்துப்பார்வை : விண்ணூசியிலிருந்து சியாட்டிலும் அதன் சுற்றுபுறமும்...24 மணி நேர சேவை :)
Tuesday, November 09, 2004 0
கடலோரக்கவிதைகள் பார்த்த பின், கட்டாயம் முட்டம் நேரில் சென்று பார்த்துவரவேண்டும் என்ற ஆசை எழுந்தது. கல்லூரியில் முதலாமாண்டு அந்த ஆசை நிறைவேறியது. நண்பர்களுடன் முட்டம் 2 நாள் பயணம்.கன்னியாகுமரியிலிருந்து 40கி.மீட்டர் தூரத்தில் உள்ளது முட்டம். இயற்கை அழகு ததும்பும் கடற்கரை.அப்போது எடுத்த புகைப்படங்கள் இவை.
கடலோரக்கவிதைகள் படத்தில் தேவாலயத்தை காண்பிக்கும்போது, தேவாலயத்தின் முன் பரந்த திடல் உள்ளது போல் காண்பிப்பார்கள். நேரில் அப்படியில்லை..தேவாலயத்தின் படிகளை ஒட்டியே கடல் அலைகள்!

********************************************************************
கடற்கரையில் நண்பனை பாறையில் இருந்து குதிக்க சொல்லி எடுத்த படம். வெறும் பாயிண்ட் & சூட் காமிராவில் தட்டியது.நண்பன் வராது என்றான். வரும் என்றேன் நான். பந்தயம்..நைனார் கடையில் முட்டை பரோட்டா!

Grid Focus by Derek Punsalan 5thirtyone.com.
Converted by Wordpress To Blogger for WP Blogger Themes.