Tuesday, November 30, 2004
ஸ்நோகுவாமி அருவி - I


சியாட்டிலிலிருந்து 25மைல் தூரத்தில் இருக்கின்றது ஸ்நோகுவாமி அருவி. இதன் உயரம் 270 அடி! கோடை காலத்தில் (ஆகஸ்ட் - அக்டோபர்) வற்றலாக கொட்டும் இந்த அருவி...மழை மற்றும் குளிர் காலத்தில்(டிசம்பர் - மார்ச்) பெருக்கெடுத்து கொட்டும். அருவியை ஒட்டியபடி மலைப்பாதை ஒன்று உள்ளது. மலைப்பாதையில் கீழிறங்கினால், அருவியை அருகிலிருந்து காண ஒரு மேடை வசதி உள்ளது. குளிர் காலங்களில் அருவி பெருக்கெடுத்து கொட்டுவதால்..மேடையிலிருந்து கீழிறங்கமுடியாது! ஆனால் கோடை காலத்தில் ஆற்றில் தண்ணீரின் சீற்றம் குறைந்திருப்பதால் மேடையிலிருந்து ஆற்றில் குதித்து அருவி அருகே சென்று வரலாம்!
ஆகா.....சியாட்டல் நகரிலிருந்து அனாமிகாவிற்கு பிறகு மற்றொரு வலைப்பதிவாளரா...மகிழ்ச்சி!! புகைப்பட பதிவுகளையும் தாண்டி இன்னும் நிறைய எழுதுங்கள் மாவுருண்டை [புனைப்பெயரும் அதற்கான படமும் அருமை] , வாழ்த்துக்கள்!
சக சியாட்டல் வாசி,
-ரா.சு
ரா.சு
வாழ்த்திற்கு நன்றி.
மாவுருண்டை