Tuesday, November 09, 2004
கடலோரக்கவிதைகள்
கடலோரக்கவிதைகள் பார்த்த பின், கட்டாயம் முட்டம் நேரில் சென்று பார்த்துவரவேண்டும் என்ற ஆசை எழுந்தது. கல்லூரியில் முதலாமாண்டு அந்த ஆசை நிறைவேறியது. நண்பர்களுடன் முட்டம் 2 நாள் பயணம்.கன்னியாகுமரியிலிருந்து 40கி.மீட்டர் தூரத்தில் உள்ளது முட்டம். இயற்கை அழகு ததும்பும் கடற்கரை.அப்போது எடுத்த புகைப்படங்கள் இவை.
கடலோரக்கவிதைகள் படத்தில் தேவாலயத்தை காண்பிக்கும்போது, தேவாலயத்தின் முன் பரந்த திடல் உள்ளது போல் காண்பிப்பார்கள். நேரில் அப்படியில்லை..தேவாலயத்தின் படிகளை ஒட்டியே கடல் அலைகள்!

********************************************************************
கடற்கரையில் நண்பனை பாறையில் இருந்து குதிக்க சொல்லி எடுத்த படம். வெறும் பாயிண்ட் & சூட் காமிராவில் தட்டியது.நண்பன் வராது என்றான். வரும் என்றேன் நான். பந்தயம்..நைனார் கடையில் முட்டை பரோட்டா!

No Responses
Post a Comment