testing

what is this?

படகு சவாரியும் வாஷிங்டன் கவர்னர் தேர்தலும்




அமெரிக்காவின் வடமேற்கு மாநிலமான வாஷிங்டனில், பியுஜெட் சவுண்ட் ( Puget Sound ) தண்ணீர் படுகையில் , உல்லாசப்படகு பயணம் சென்றபோது எடுத்த படம். பியுஜெட் சவுண்ட் தண்ணீர் படுகை பசிபிக் பெருங்கடலிலிருந்து சியாட்டில், ஒலிம்பியா, டக்கோமா நகரத்துறைமுகங்களுக்கு வழிவகுக்கின்றது.

எல்லோரும் அமெரிக்க தேர்தல் முடிவுகளப் பார்த்திருப்பீர்கள். எங்கள் மாநிலத்தில் கவர்னர் தேர்தலும் செனேட்டர் தேர்தலும் ஜனாதிபதி தேர்தலுடன் சேர்ந்தே நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தலில் எங்கள் மாநிலம் கெர்ரியை தேர்ந்தெடுத்து 11 எலக்ட்டோரல் வோட்டுகளைப் பெற்று தந்தது. ஒரு பிரயோஜனமும் இல்லை. ஒஹாயோ படுத்திவிட்டது.

செனேட்டர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் பாட்டி(patty) முர்ரே (அம்மணி பாட்டி தான் :) ) எளிதாக வெற்றி பெற்றார்.
கவர்னர் தேர்தலில் தான் விறுவிறுப்பு. கடந்த 20 ஆண்டுகளாக ஜனநாயக கட்சியைச் சார்ந்தவர்களே கவர்னராக இருந்துள்ளனர். கடந்த இரு முறையும் வெற்றி பெற்ற கவர்னர் காரி லாக்கி, இந்த முறை தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கவர்னர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் சார்பில் மாநிலத்தின் அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டின் கிரேக்கெயரும் குடியரசுக்கட்சியின் சார்பில் டைனோ ரோஸியும் போட்டியிட்டனர். நேற்று தொடங்கிய வோட்டு எண்ணிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி முன்னணி வகித்தனர். 2 மில்லியன் வோட்டுகள் எண்ணப்பட்டிருந்த நேரத்தில் ரோஸி கிரெக்கெயரைக்காட்டிலும் வெறும் 1000 வோட்டுகள் முன்னணியில் இருந்தார். தற்போதைய (நவம்பர் 2, 2004 5.30 PST) நிலவரப்படி கிரெக்கெயர் 14,000 ஆயிரம் வோட்டு அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். தபால் வோட்டுகளும் இன்னும் எண்ணப்படவேண்டும்.வெற்றி பெற்றவரை அறிவிக்க 2நாட்களிலிருந்து ஒரு வாரம் ஆகலாம்!

ரோஸி ஜெயித்தால் 20 வருடம கழித்து மாநிலத்திற்கு குடியரசுக்கட்சியை சார்ந்த கவர்னர்.
கிரெக்கெயர் வெற்றி பெற்றால் வாஷிங்கடன் முழுதும் ஜனநாயக கட்சியைச் சார்ந்த "அம்மா"க்களின் கீழ். ஆம் மாநிலத்தின் 2 செனேட்டர்களும் பெண்மணிகள் - பாட்டி முர்ரே மற்றும் மேரியா காண்ட்வெல். கூடவே கவர்னரும்! இது சாத்தியமானால், அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு மாநிலத்தின முக்கிய ஆட்சியாளர்கள் அனைவரும் பெண்கள்!.

No Responses